| சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இயக்குநர்கள் சீமான்,அமீர், மற்றும் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர் வைகோ,கண்ணப்பன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பெரியார்திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் பல்லடம் நகரில் நடைபெற்றது. |
ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும் பெரியார் தி.க.வின் நகர தலைவர் துரைசாமி தலைமையில் தோழர்கள் திருமூர்த்தி, விஜயன், ஆறுமுகம், மயில்சாமி, முகில்ராசு, கார்த்திகேயன், சண்முகம் மற்றும் அகிலன் உள்ளிட்ட 40 பேரை காவல்துறை கைது செய்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக