வியாழன், 18 டிசம்பர், 2008

தமிழ் மக்களுக்கு எதிரான போரில் உலக நாடுகள் ஈடுபடுவது வன்னி கள முனையில் அம்பலம்!

                     
சிறிலங்கா வன்னி மீது பாரிய போரைத் தொடுத்திருக்கும் நிலையில் வன்னிக் களமுனைக்கு சென்று ஏழு நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆலோசனைக்கான சந்திப்பில் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் ஆலோசகர்கள் பங்கேற்றுள்ளனர். கடந்த திங்களன்று இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

வன்னியின் களமுனைக்கு சென்று நேரடியாகப் பார்வையிட்ட இவர்கள், இந்தப் போரில் ஈடுபட்டுள்ள 57வது படைப்பிரிவு மற்றும் 59வது படைப்பிரிவு ஆகியவற்றின் தலையகங்களுக்கு சென்றும் ஆலோசனைகளை நேரடியாக வழங்கியுள்ளதாக சிறிலங்கா தரப்பு தெரிவித்துள்ளதுடன், களமுனைக்குச் சென்ற படங்களையும் வெளியிட்டுள்ளது.

சமாதானப் பேச்சுக்களின் மூலம் தீர்வொன்றைக் காணவேண்டும் என வலியுறுத்தி வரும் நாடுகள் வன்னிக் களமுனைக்கு சென்று இராணுவத்தினருக்கு ஆலோசனைகளை வழங்கிவருவது சமாதானத்தை நேசிப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா ஒரு தலைப்பட்சமாக போரில் இருந்து விலகியபோது மௌனமாக இருந்த சர்வதேசம், தற்போது அந்நாடு மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பினை நேரடியாக வழங்க முன் வந்தள்ளமையானது இலங்கைத் தீவில் பாரிய மனித அழிவுகளுக்கு வழிவகுக்கும் என மனித உரிமை வாதிகளால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தற்போது களமுனையில் படையினர் பாரிய அழிவுகளைச் சந்திக்கத் தொடங்கியுள்ள நிலையில், விடுதலைப் புலிகளின் கை ஓங்கிவரும் நிலையில், சர்வதேசம் மீண்டும் சிறிலங்காவைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளமையும், அதற்கான முன்னடவடிகையான இந்த ஆலோசகர்களின் பயணம் அமைந்துள்ள குறிப்பிடத்தக்கது.

                                                                                                                    நன்றி. தமிழ்ச்செய்தி....
                                                                                                                          http://www.tamilseythi.com

சனி, 15 நவம்பர், 2008

ஈரோட்டில் இராஜபக்ச வருகையை கண்டித்து பாடை ஊர்வலம்:86 பேர் கைது!



தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்களவெறியன் கொலைகாரன் இராஜபக்சே!
பெரியார் திரவிடர் கழக மாவட்ட செயலாளர் இராம இளங்கோவன் தலைமையில் இன்று காலை [13.10.2008] 10 மணியளவில் ஈரோட்டில் எம்.ஜி.ஆர் சிலை அருகே, கொலைகாரன் சிங்களவெறியன் ராஜபக்சே இந்தியா வந்துள்ளதைக் கண்டித்து "இராஜபக்சே" வை பாடைகட்டி தூக்கி ஊர்வலமாக வந்தனர்.

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!


ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தினரால் கோவையில் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 9௧1௨008 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் சிரீராம் திரையரங்கம் முன்பு  பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில்  காயக்கட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய,இலங்கை அரசுகளைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

இந்திய,இலங்கை அரசுகளைக்கண்டித்து பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர்களின் மீதான தக்குதலைக்கண்டித்தும், இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதைக் கண்டித்தும், விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும்...
இன்று (02.10.2008) ஞாயிறு மாலை 5 மணிக்கு கோவை மாவட்டம் சூலூர் பேருந்து நிலையம் முன்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையில் காயக்கட்டுக்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது


                                                                                                                                               பல்லடத்தில் சீமான்-அமீர் கைதினை கண்டித்து ஆர்ப்பாட்டம்-பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
சிங்கள இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு துணை போகும் இந்திய அரசைக் கண்டித்தும் இயக்குநர்கள்  சீமான்,அமீர், மற்றும் ம.தி.மு.க வின் பொதுச்செயலாளர்  வைகோ,கண்ணப்பன் ஆகியோரை விடுதலை செய்யக்கோரியும் பெரியார்திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  கோவை மாவட்டம் பல்லடம் நகரில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு  காவல்துறை அனுமதி மறுத்திருந்த போதிலும் பெரியார் தி.க.வின் நகர தலைவர் துரைசாமி தலைமையில் தோழர்கள் திருமூர்த்தி, விஜயன், ஆறுமுகம், மயில்சாமி, முகில்ராசு, கார்த்திகேயன், சண்முகம் மற்றும்  அகிலன் உள்ளிட்ட 40 பேரை காவல்துறை கைது செய்தது.